Sunday 19th of May 2024 03:35:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
நடிகை சாய் பல்லவியின் சாதனை!

நடிகை சாய் பல்லவியின் சாதனை!


நடிகை சாய் பல்லவி நடித்த மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனையை நிலைநாட்டியள்ளது.

இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இப்படங்களின் வௌியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

நடிப்பை போலவே நடனத்திலும் அனைவரையும் கவரும் திறமையுடையவர் இதனால் இவர் நடனமாடும் பாடல்கள்அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நடித்த மூன்று பாடல்கள் Youtube-இல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதாவது, மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே போல் ‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியனையும் தற்போது அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் வேறு எந்த நடிகையும் படைக்காத சாதனையை இவர் படைத்திருக்கிறார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE